நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் மூன்று குட்டி யானைகள், பாகன்களின் கட்டளைக்கிணங்க நடைபயிற்சி பழகும் வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் யானை வளர்ப்பு முகாமில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் முக்கிய அங்கம் வகிக்கிறது.
சமீபத்தில் தாயை பிரிந்த மூன்று குட்டி யானைகளும் இந்த முகாமில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த குட்டி யானைகளை பராமரிக்க ஏழு காவலர்கள் பணியாற்றி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவும், குட்டி யானைகளை அறிவியல் பூர்வமாக நிர்வகிப்பதற்காக கால்நடை மருத்துவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் வளர்ப்பு குழந்தையை போல் குட்டி யானைகள் தெப்பக்காடு முகாமில் பாகன்களின் சொல்லுக்கு கீழ்படிந்து நடைபயிற்சி மேற்கொண்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவைபுயம் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.