“பாரதத்தில் சாணக்கியா பல்கலைகழகம் மற்றும் ரிஷி பல்கலைக்கழகங்களை நிறுவுவதன் மூலம், இளைஞர்கள் மற்றும் பொது மக்களிடம் தேசிய சிந்தனை வளரும்” என ஆர்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இந்துக்களின் கலாச்சாரம் சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில் ஆர்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “இளம் தலைமுறையினர் வோக்கிசம் பேசுபவர்களாக மாற்றப்படுகிறார்கள்” என வேதனை தெரிவித்தார். மேலும், “பாரதத்தில் அவசரநிலை கொண்டுவந்தபோது கலாச்சார மார்க்சியம், வோக்கிசம் ஊடுருவி விட்டன” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “அமெரிக்காவில் இருந்து உருவாக்கப்பட்டதுதான் வோக்கிசம்” எனவும், எனவே, “நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு, மிக அழகாகவும், அனைவருக்கும் புரியும்படியும் ஆர்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் விளக்கம் கொடுத்தார்.