ரஷ்யாவில் தேவாலயங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் தெற்கு மாகாணமான தாகெஸ்தானில் உள்ள தேவாலயங்களில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
டெர்பென்ட், மகச்சலா நகரங்களில் உள்ள தேவாலயங்களில் நுழைந்த தீவிரவாதிகள் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் பாதிரியார் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 25க்கும் மேற்பட்ட படுகாயமடைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெர்பென்ட் நகரில் உள்ள தேவாலயம் மற்றும் மகச்சலாவில் உள்ள சோதனைச்சாவடியையும் தீவிரவாதிகள் தீவைத்து எரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.