மும்பையில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா – ஜாகீர் இக்பால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சல்மான்கான், வித்யா பாலன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
புகழ்பெற்ற நடிகரும், முன்னாள் எம்பியுமான சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா தமிழ், இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சோனாக்ஷி சின்ஹாவுக்கும், அவரது நீண்டநாள் காதலரான ஜாகீர் இக்பாலுக்கும் மும்பையின் பாந்த்ராவில் உள்ள சத்ருகன் சின்ஹா இல்லத்தில் எளிய முறையில் பதிவு திருமணம் நடைபெற்றது.
இந்த விழாவில் இருவீட்டாரைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நடிகர்கள் சல்மான்கான், அனில்கபூர், கஜோல், வித்யா பாலன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.