சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் டெகுலா குடெம் பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கோப்ரா பிரிவு வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நக்சலைட்டுகள் மண்ணில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியதில், சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நக்சலைட் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.