அருணாசல பிரதேச தலைநகர் இட்டாநகரில் மேகவெடிப்பால் கனமழை பெய்தது.
இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகின்றனர்.
தென்மேற்குப் பருவமழை காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அஸ்ஸாமில் சுமார் 4 லட்சம் பேர் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.