ஜெர்மனியில் நடைபெற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இத்தாலி வீரர் வெற்றி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் , போலந்து வீரர் ஹர்காக்ஸ் மோதினர். தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 7-6, 7-6 என்ற செட் கணக்கில் ஹர்காக்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.