புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ஸ்ரீ பிரஹதாம்பாள் தாஸ் ராஜகோபால தொண்டைமான் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மன்னர் ராஜகோபால தொண்டைமான் திருவுருச் சிலைக்கு மன்னர் குடும்பத்தை சேர்ந்த மன்னர் ராஜ ராஜகோபால தொண்டைமான் மற்றும் அவரது மனைவி சாருபால தொண்டைமான் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பாஜக மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.