நாகை அருகே பால முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருக்குவளை அடுத்த மேலவாழக்கரை பாலமுனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று, கடம் புறப்பாடு நடைபெற்றது.
மங்கல வாத்தியங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.