ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பரமக்குடியை சேர்ந்த மேகலா என்பவர் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு மணிகண்டன் என்ற வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கடந்த ஒரு மாதமாக அவரை மேகலா புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பெரிய கடை பஜாருக்கு சென்ற மணிகண்டன் அங்கிருந்த மேகலாவை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து மேகாலவின் உடலை கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.