கேரளாவில் உள்ள பானாசுர சாகர் அணையில் நீந்திச் செல்லும் புலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வர்க்கீஸ் என்பவரின் பசுமாட்டை புலி ஒன்று வேட்டையாடி கொன்றது.
புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டிவரும் வேளையில், பாணாசுர சாகர் அணையில் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள், புலி ஒன்று தண்ணீரில் நீந்திச் செல்வதைக் கண்டு கூச்சலிட்டனர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.