தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மைல் கல் மீது கார் மோதிய விபத்தில் உயிருக்கு போராடியவரை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் தனது காரில் ஆலங்குளம் அருகே சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதாமாக கார் மைல் கல் மீது மோதி விபத்து ஏற்பட்டது, இதில் சாகுல் ஹமீத் சேதமடைந்த காரின் இடர்பாட்டில் சிக்கி தவித்தார்.
இதைக்கண்ட தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.