தெலுங்கானாவில் புர்கா அணிந்துகொண்டு நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேட்ச்சல் நகரில் அமைந்துள்ள ஜெகதாம்பா என்ற நகைக்கடையில் கடந்த 20ம் தேதி புர்கா அணிந்துகொண்டு நகை வாங்குவது போல 3 பேர் சென்றுள்ளனர்.
அவர்களில் ஒருவன், திடீரென கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடிக்க முயன்றான்.
அப்போது சுதாரித்துக் கொண்ட உரிமையாளர், கடைக்கு வெளியே ஓடிச் சென்று கூச்சலிட்டார். இதனால் பயந்துபோன கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடினர்.
இதுதொடர்பாக 16 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் கொள்ளையர்களை கண்டுபிடித்த போலீசார் நசீம் அஜீஸ் கொட்டடியா, ஷேக் ஷோகைல், சல்மான் ஆகிய 3 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.