நீலகிரி மாவட்டம், கார்குடி வனப்பகுதி கால்வாயில் விழுந்த குட்டியானையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
கார்க்குடி வனப்பகுதியில் வேட்டை தடுப்புக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள கால்வாயில் பிறந்து சில நாட்களே ஆன குட்டி யானை ஒன்று சிக்கி இருந்தது, இதைக்கண்ட காவலர்கள் மற்றும் வனத்துறையினர் குட்டியானையை பாதுகாப்பாக மீட்டு தாய் யானையுடன் சேர்த்து வைத்தனர்.