நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட எம்.பி.க்களுக்கு மக்களவை இடைக்கால தலைவர் பர்த்ருஹரி மகதாப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
மத்தியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில், 18-ஆவது மக்களவை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்றார்.
அவருக்கு மக்களவை இடைக்கால தலைவர் பர்த்ருஹரி மகதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து மூத்த உறுப்பினர்கள் ராதா மோகன் சிங், ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயல், எச்.டி. குமாரசாமி உள்ளிட்டோர் அடுத்தடுத்து பதவியேற்றுக் கொண்டனர்.