மக்களவை இடைக்கால சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த எம்பியான பர்த்ருஹரி மஹதாப் பதவியேற்றார்.
18-வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றார்.
டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்வில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கட்டாக் தொகுதியிலிருந்து பிஜூ ஜனதா தளம் கட்சி சார்பில், 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பர்த்ருஹரி மஹ்தாப், அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாஜக சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.