‘க்வாட்’ அமைப்பின் உறுப்பு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில் இந்திய-பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் தொடர்பாகவும், ‘க்வாட்’ அமைப்பின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் ‘க்வாட்’ அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்திய-பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.