திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சின்ன காவனம் பகுதியில் வசித்து வந்த லட்சுமணன், பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்புடையவர்.
இவருடைய மனைவி ரம்யாவுக்கும், விஷ்ணு என்ற ரவுடிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் லட்சுமணனும், விஷ்ணுவும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த விஷ்ணுவின் நண்பர்கள், லட்சுமணனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். ரவுடி லட்சுமணன் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.