டெல்லியில் டயரியா விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததும் முதலாவதாக தொடங்கிவைக்கும் திட்டம் இதுவென கூறினார்.
கடந்த 2014-இல் இந்திரதனுஷ் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதை நினைவுகூர்ந்த நட்டா, அந்தத் திட்டத்தை இரண்டு வாரம் முதல் இரண்டு மாதம் வரை ஆய்வு செய்ததாகவும் தெரிவித்தார்.
அந்த வகையில், கடந்த 2014-இல் ஆயிரம் குழந்தைகளுக்கு 45 ஆக இருந்த இறப்பு வீதம், தற்போது 32 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.