தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட நாளை துக்க நாளாக அனுசரிப்போம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975ஆம் ஆண்டு இதே நாளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்தாக கூறியுள்ளார்.
அரசியலமைப்பை தூக்கியெறிந்து, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கிய நாளை தேசம் அதிர்ச்சியுடன் நினைத்து பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியில் ஜனநாயகம் நசுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதமேந்திய ராணுவத்தினர் பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து, ரைஃபிள் துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கி தங்களை வெளியேற்றிய நாளை தமது பல்கலைக்கழக நண்பர்களால் எப்படி மறக்க முடியும் என்றும் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சொந்தப் பிள்ளைகளால் முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் என வேதனை தெரிவித்துள்ள அவர், இந்த நாளை துக்க நாளாக அனுசரிப்போம் என கேட்டுக்கொண்டுள்ளார்.