கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் எழுப்ப ராகுல் காந்திக்கு தைரியம் உள்ளதா என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கள்ளக்குறிச்சி விவகாரம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய விவகாரத்தில் உயிர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக அரசு நிர்வாகம் மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சிபிஐ விசாரணையை எதிர்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்யாததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருணாபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள பட்டியலின மக்களின் நலன் மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்காக கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ராகுல் காந்தி செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்
கள்ளச்சாராய விவகாரத்தில் பாசாங்குத்தனமான மௌத்தைக் கலைத்துவிட்டு இந்த பிரச்னையில் ராகுல் காந்தி குரல் எழுப்ப வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.