மத்திய அரசு சுட்டிக்காட்டிய திருத்தங்களுடன் கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றி அம்மாநில சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேரளா என்னும் பெயரை ‘‘கேரளம்’’ என மாற்றும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாநில சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த தீர்மானத்தை திருப்பி அனுப்பிய மத்திய அரசு அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு மீண்டும் நிறைவேற்றும்படி அறிவுறுத்தியது.
அதனைத்தொடர்ந்து கேரள சட்டசபையில் மத்திய அரசு சுட்டிக்காட்டிய திருத்தங்களுடன் இண் முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.