கேரள மாநிலத்தின் பெயரை மாற்றுவது சட்டப் பேரவையின் உரிமை சார்ந்தது என மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டத்துக்கு உட்பட்டு கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற விரும்பினால், அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தார்.
அதேவேளையில், பொதுமக்களின் விருப்பத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென சுரேஷ் கோபி வலியுறுத்தினார். நெருக்கடி கால நிலை குறித்து கருத்து தெரிவித்த அவர், அது மிகப்பெரிய கறை என்று குறிப்பிட்டார்.