சென்னை விமான நிலையத்தில் ரூ.7.58 கோடி மதிப்புள்ள 12.095 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறையின் தகவலின்படி, துபாய், அபுதாபி ஆகிய இடங்களில் இருந்து இங்கு வந்திறங்கிய 10 பயணிகளை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் உள்ளாடைகள் மற்றும் காலணி சாக்ஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 தங்கச்சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 4.645 கிலோ எடை கொண்ட தங்கச்சங்கிலிகளின் மதிப்பு ரூ. 2.91 கோடியாகும்.
மேலும் உடலில் மறைத்து வைத்து எடுத்து வந்த தங்கப்பசையும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 7.45 கிலோ எடைகொண்ட இவற்றின் மதிப்பு ரூ. 4.67 கோடியாகும்.
10 பயணிகளும் கைது செய்யப்பட்டு ஆலந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.