இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில், புதிய எம்பிக்கள் பதவி ஏற்பதற்கும், சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கும் கடந்த 24ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியது.
முதல் 2 நாட்கள் எம்பிக்கள் பதவியேற்ற நிலையில், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. .
துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என இண்டியா கூட்டணி நிர்பந்தித்ததால்தான் சபாநாயகர் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன்படி, பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இண்டியா கூட்டணி சார்பில் கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் எம்பியான கொடிக்குன்னிஸ் சுரேஷும் சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
இரு தரப்பு சார்பிலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பாஜக முன்வந்தால், ஆளுங்கட்சியின் வேட்பாளர் ஓம் பிர்லாவை ஆதரிப்போம் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.