விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ஆக இருந்த புகழேந்தியின் மறைவையொட்டி,அங்கு வரும் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 64 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 29 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் உள்ளது. இதனைத் தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது.