சென்னையின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து தினசரி 18 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வீராணம் ஏரியில் நீர் வரத்து இல்லாததால், நெய்வேலி சுரங்கம், ஆழ்துளை கிணறுகள் மற்றும் பரவனாற்றிலிருந்து நீர் எடுக்கப்பட்டு சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
தற்போது வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான ஆயிரத்து 465 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வீராணம் ஏரியிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.