சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நிறைகுளத்து அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
விளாக்குளம் கிராமத்தில் மழைபெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் புரவிகளுக்கும், பொம்மைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.