கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை அருகே சிதலமடைந்த சாலையில் தேங்கிய நீரில் பாஜக செயற்குழு உறுப்பினர் சீமா தலைமையில் பொதுமக்கள் காகித படகு விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்லம்விளாகம் பகுதியில் பாண்டியன்விளை – மார்த்தாண்டம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளதால், தற்போது பெய்த மழையில் குளம் போல காட்சியளிக்கிறது.
சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை முறையிட்டும், பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றர்.