கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கண் லென்ஸ் அளவு கணக்கிடும் கருவி ஸ்கேன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில், நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கண்ணின் கருவிழியில் லென்ஸ் பொருத்துவதற்கு அளவு எடுக்கும் A SCAN என்ற கருவியை, தொண்டு நிறுவனம் ஒன்று அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த கருவி, கருவிழியின் லென்ஸ் பொருத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.