புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்ததில், 30 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டையிலிருந்து மணப்பாறைக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து, அன்னவாசல் பெட்ரோல் பங்க் அருகே திடீரென சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை, பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பியோடிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை போலீசார் தேடி வருகின்றனர்.