முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான நில மோசடி வழக்கில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த மாதம் 11-ம் தேதி தன் மகளை மிரட்டி சொத்து ஒன்றை கிரயம் செய்யப்பட்டதாக கரூர் காவல்நிலையத்தில் பிரகாஷ் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக 7 பேர் மீது 8 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தன் பெயரும் சேர்க்கப்படலாம் என நினைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் வடமாநிலத்தில் இருப்பதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சிபிசிஐடி தனிப்படை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.