பெரம்பலூர் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
பரவாய் கிராமத்தை சேர்ந்த வேலு வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி பானுமதி மற்றும் 2 மகன்கள் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் தனது மகன்களுடன் பானுமதி பக்கத்து தெருவில் உள்ள உரவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் உள்பட 7 சவரன் தங்க நகையும் தீயில் எரிந்து சேதமடைந்தன.