முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டியுள்ளது.
நேற்று இரவு பெய்த கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 3 ஆயிரத்து 759 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து விநாடிக்கு 967 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, லோயர்கேம்பில் இருந்து வீரபாண்டி வரையுள்ள, முல்லைப் பெரியாற்றின் கரையோர பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.