துபாய் பந்தயக்களத்தில் ரேஸ் கார் ஓட்டும் நடிகர் அஜித்தின் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், விடாமுயற்சி மற்றும் GOOD BAD UGLY என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் துவங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
இந்நிலையில், நடிகர் அஜித் துபாய் பந்தயகளத்தில் கார் ஓட்டிய காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் கார்களை உற்று நோக்கும் அஜித், பிறகு அதனை களத்தில் வேகமாக ஓட்டிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பி.எம்.டபிள்யூ. மற்றும் ரேஸ் காரில் சீறிப்பாயும் அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது