கோவை மாவட்டம் அன்னூர் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வரும் பிரவீன், வெற்றிவேல் ஆகிய மாணவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனால் வாட்ஸ்அப் குழுக்களில் ஒருவரை ஒருவர் கேலி, கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் தன்னை கேலி செய்து மீம்ஸ் வெளியிட்ட பிரவீனின் செல்போனை வெற்றிவேல் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், தனது நண்பர்களுடன் இணைந்து பயங்கர ஆயுதங்களுடன் வெற்றிவேலின் அறைக்கு சென்றுள்ளார்.
இதனையதையறிந்து அதிர்ச்சியடைந்த வெற்றிவேல், காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில் பிரவீன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.