புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் ஒருநாள் தலைமை ஆசிரியராக பதவி ஏற்றுக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளியில், நன்றாக படித்து பள்ளிக்கு பெருமை சேர்த்து வரும் மாணவியாக மெய் வர்ஷிதா என்ற மாணவி இருந்து வருகிறார்.
இவரை அனைத்து ஆசிரியர்களும் தேர்ந்தெடுத்து ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணி அமர்த்தினர்.
அப்போது மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த தலைமை ஆசிரியை தமிழரசி பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் தலைமை பண்புகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த ஒரு நாள் தலைமை ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் ஆசிரியர்களுடன் சென்ற மாணவி மெய் வர்ஷிதா வகுப்பறைகள் மற்றும் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார்.