புதுச்சேரியில் பாலியல் துன்புறுத்தல் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சட்டமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் பணியாற்றும் திருநங்கைகளுக்கு, அங்குள்ள அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத அரசைக் கண்டித்து 200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சட்டமன்றம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.