இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 6 லட்சம் ஏக்கர் நிலங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பதிவேட்டில் இல்லை என்கிற அவலநிலை தற்போது உள்ளதாக உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பின் தலைவரும், ஆன்மீக விழா ஒருங்கிணைப்பாளருமான ராஜசேகரன் குற்றச்சாட்டியுள்ளார்.
திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்துக்கள் இடையே ஒற்றுமை இல்லாததால், இந்து தர்மம் பலரது தாக்குதலுக்கும், ஏளனத்துக்கும் ஆளாகி வருகிறது என்றார்.
எந்த ஒரு சமயமும் இதுபோன்ற தாக்குதலையும், அழிவையும் சந்தித்தது இல்லை என ராஜசேகரன் வேதனை தெரிவித்தார்.
மேலும், இந்துசமயத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால், தேர் திருவிழாக்களில் விபத்துக்களும், உயிர் பலிகளும் ஏற்படுகிறது என அவர் கூறினார்.