திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சுரங்க வழிப்பாதை அமைத்துத் தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொடைரோடு அருகே ஜல்லிபட்டி பிரிவு என்ற இடத்தில், புதியதாக நான்கு வழி சாலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் மாற்று பாதையில் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
ஆகையால், தங்களுக்கு சுரங்க வழிப்பாதை அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி மதுரை- திண்டுக்கல் நான்கு வழி சாலையில் டிப்பர் லாரிகளை மறித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.