இலவச பேருந்து பயண சீட்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறையை ரத்து செய்யக்கோரி, சென்னையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளி ஆணையரக அலுவலத்தில் திரண்ட 50-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.