விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 64 பேர் போட்டியிட வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இதில் 35 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் வேட்புமனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளிலும் 29 பேரில் யாரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற விருப்பம் தெரிவிக்கவில்லை.
மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான நேரம் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிடுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.