இந்தியாவில் பாரசிட்டமால் உள்ளிட்ட 52 மருந்துகள் தரமற்றவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹிமாசல பிரதேசம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், இந்தத் தகவல் தெரியவந்தது.
ஆகையால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம், சந்தையிலிருந்து அந்த மருந்துகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.