அண்மையில் நடைபெற்ற நெட் உள்ளிட்ட ஓரிரு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் DARK NET மூலம் கசிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அது என்ன DARK NET? விரிவாக பார்க்கலாம்…!
இது வெறும் காட்சி அல்ல. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கான சாட்சி. இன்றைய தேதிக்கு இணையர் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம். ஆனால் இணையம் இல்லாமல் வாழ முடியாது. இவ்வளவு முக்கியமான இணையத்தைப் பற்றியும் அதன் கருப்பு பக்கங்களைப் பற்றியும் நம்மில் பலருக்கு தெரியாது என்பதுதான் நகைமுரண்.
பொதுவாக இணைய பயன்பாட்டை மூன்று வகையாக பிரிக்கலாம். SURFACE, DEEP WEB மற்றும் DARK NET.
GOOGLE உள்ளிட்ட SEARCH ENGINE-கள் மூலம் நாம் பயன்படுத்தும் இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவை SURFACE-ல் வந்துவிடுகின்றன. பெரும்பாலானவர்கள் பயன்படுத்தினாலும் மொத்த இணைய பயன்பாட்டில் SURFACE-ன் பங்கு 9 விழுக்காடு மட்டுமே.
அடுத்தது DEEP WEB. பெயருக்கு ஏற்றார்போல் ஆழத்தில் இருப்பது… அதாவது குறிப்பிட்ட நபர்களைத் தவிர பிறரால் இந்த இணைய பக்கங்களை பயன்படுத்த முடியாது. இன்னும் எளிமையாக சொல்வதென்றால் DEEP WEB-ல் இருக்கும் SITE-களை தேடுபொறிகள் காட்டாது. உதாரணமாக அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தனி மனிதர்களின் தரவுகளை சேமித்து வைத்திருப்பார்கள்.
அவற்றில் எதையெல்லாம் வெளியிடலாமோ அதை SURFACE-லும் மறைக்க வேண்டியதை DEEP WEB-லும் வைத்திருப்பார்கள். குறைந்த நபர்களால் கையாளப்பட்டாலும் இணைய பயன்பாட்டில் DEEP WEB-ன் பங்கு 90 விழுக்காடு.
மூன்றாவது DARK NET… மிகவும் வில்லங்கமான இதை DEEP WEB-ன் சிறிய பகுதி என்று கூறலாம். போதைப்பொருள் விற்பனை, ஆயுத விற்பனை, ஆள்கடத்தல், கொலையாளிகள் SUPPLY, வங்கிப்பரிவர்த்தனை மோசடி என இணையம் மூலம் நடக்கும் அனைத்து குற்றங்களும் DARK NET மூலமே அரங்கேறுகின்றன.
தொழில்நுட்ப யுகத்தில் எல்லா குற்றங்களிலும் துப்புதுலக்க பெரிதும் உதவுபவை செல்போன் எண்ணும், இணைய முகவரியும், சிசிடிவி காட்சிகளும்தான். எனினும் DARK NET குற்றவாளிகளை அவ்வளவு எளிதாக பிடிக்க முடியாது. அவர்களின் இணைய முகவரியை கண்டறிவது சாதாராண காரியமல்ல.
காவல்துறை IP ADDRESS-ஐ TRACE செய்யும் போது அதன் இருப்பிடம் மாறிக்கொண்டே இருக்கும். பொதுவாக TOR என்னும் BROWSER மூலமே DARK NET இயங்குகிறது. THE ONION ROUTER என்பதன் சுருக்கமே TOR. எப்படி உரிக்க உரிக்க வெங்காயத்தில் ஒன்றும் இருக்காதோ அப்படி TOR BROWSER-ல் எவ்வளவு தேடினாலும் குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிய முடியாது.
இப்படி ஒரு BROWSER-ஐ DEVELOP செய்தது அமெரிக்க ராணுவம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அமெரிக்க உளவு அமைப்புகளுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள TOR BROWSER பயன்படுத்தப்பட்டது. அது இப்போது இணைய குற்றவாளிகளின் கூடாரமாகிவிட்டது. குழு குழுவாகத்தான் DARK NET குற்றவாளிகள் செயல்படுவார்கள். வெளி ஆட்கள் யாரும் அதில் இணைய முடியாது.
குழுவில் இருக்கும் ஒருவர் அழைப்புவிடுத்தால் மட்டுமே ஒருவர் அதில் சேர முடியும். இந்த குற்றவாளிகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் இணைய பக்கத்தை HACK செய்து தகவல்களை திருடி விற்பார்கள்.
அப்படித்தான் ஆதார் விவரங்கள் முதல் வினாத்தாள் வரை DARK NET-ல் விற்கப்படுகின்றன. சில சமயம் வேறு ஒருவரிடம் வாங்கி விற்பதும் உண்டு. CRYPTO CURRENCY மூலமே பணப்பரிமாற்றங்கள் நடக்கின்றன.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் இதுபோன்ற குழுக்களில் பல்வேறு நாடுகளின் உளவாளிகளும் இணைந்திருப்பார்கள்.
தங்கள் நாட்டைப் பற்றிய தகவல்கள் கசிந்தாலோ, பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் விஷயங்கள் நடந்தாலோ அது குறித்து அரசுக்கு தெரிவிக்கவே இந்த ஏற்பாடு. உலகம் முழுவதும் பல DARK NETகுழுக்கள் உள்ளன. அவற்றில் ஒன்றே SILK ROAD.
2011 முதல் 2013 வரை போதைப்பொருள் விற்பனையில் கொடிகட்டி பறந்த இணையப்பக்கம். அது எங்கிருந்து இயங்குகிறது? அதை இயக்குவது யார் என்று தெரியாமல் அலைந்து களைத்த அமெரிக்க காவல்துறை ஒருவழியாக 2013-ஆம் ஆண்டு SILK ROAD இணையப்பக்கத்துக்கு END CARD போட்டது. அதைப்பற்றிய ஆங்கிலத் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.
அரசும் காவல்துறையும் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் DARK NET-ஐ கட்டுப்படுத்த முடியவில்லை. வேறு வேறு பெயர்களில் இணையப் பக்கங்களை தொடங்கி இம்சையைக் கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள் CYBER குற்றவாளிகள். முடிந்தவரை அவர்களிடம் சிக்காமல் இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது மட்டுமே இதிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி.