பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, பாஜக மூத்த தலைவர் அத்வானி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், சிறுநீரகவியல் துறை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.