ஹரியானா ஆளுநரின் பேத்திகள் மழலைக் குரலில் பாடிய பாடலை கேட்டு ஆனந்தம் அடைந்த பிரதமர் மோடி அவர்களை கொஞ்சி மகிழ்ந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை, ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா நேரில் சந்தித்து பேசினார். ஆளுநருடன் அவரது இரு பேத்திகளும் உடன் சென்றிருந்தனர்.
அப்போது அந்த இரு குழந்தைகளும் தங்களது மழலைக் குரலில், பிரதமர் மோடி முன்னிலையில் தேச பக்தி பாடல்களை பாடினர். இதனைக் கேட்டு ஆனந்தமடைந்த பிரதமர் மோடி, இரு குழந்தைகளையும் பாராட்டி கொஞ்சி மகிழ்ந்தார்.