அரசு வேலைவாய்ப்பு குறித்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுத் துறைகளில் 5 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால், 2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் பேருக்கு வேலை என்று பேரவையில் அறிவித்ததன் மூலம் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக கூறியுள்ளார்
அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே இளைஞர்களின் கோரிக்கை என சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இனிவரும் காலங்களிலும் போட்டி தேர்வுகளின் மூலமாக மீதமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.