திருமணமான பெண்களை பணிக்கு எடுப்பதில்லை என எழுந்த குற்றச்சாட்டை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய தொழிலாளர் நலன் துறை உத்தரவிட்டுள்ள நிலையில், திருமணமான பெண்களை பணியமர்த்தக் கூடாது என கொள்கை முடிவு எதுவும் இல்லை என ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள ஆலையில் பணியாற்றுபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் எனவும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.