தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளர் சதீஷ்குமார் என்பவர் பத்திரப்பதிவுக்கு கட்டாயமாக பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது இதனால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலங்களை விற்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.