தெலுங்கனாவில் வாகன ஓட்டிகளை தூரத்திலே எச்சரிக்கும் விதமாக போலீசார் ஒருவர் வாகனத்துடன் நிற்பது போல பேனர் வைத்து காவல்துறையினர் விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளனர்.
சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் ராஜன்னா ஸ்ரீசில்லா பகுதியில் பிளைவுட்டில் தயார் செய்யப்பட்ட போக்குவரத்து போலீஸ் ஒருவர் வாகனத்துடன் நிற்பது போல வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த அட்டைப்படத்தை தூரத்தில் இருந்து பார்க்கும் போது வாகன ஓட்டிகள் தங்களின் தவறுகளை முன்பே திருத்தி கொள்வர் எனவும் இதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும் எனவும் கூறப்படுகிறது.